சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறியதற்காக 200 பேருக்கு அபராதம்; மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்ட இருவருக்கு $1,000 அபராதம்..!

சிங்கப்பூரில் சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள இரண்டாவது வார இறுதியில், விதிகளை மீறியதற்காக 200 பேருக்கு $300 அபராதம் (ஏப்ரல் 18) விதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்வதாகவும், அவர்கள் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளை பின்பற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்..!

முகக் கவசம் அணியாமல் வெளியே சென்ற குற்றத்திற்காக 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு $300 அபராதம் விதிக்கப்பட்டது.

அவர்களில் குறைந்தது இரண்டு பேர் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்ட காரணத்தினால் $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு முகநூல் பதிவு ஒன்றில் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி இவை ஏமாற்றமளிக்கும் எண்ணிக்கை என்றார்.

இருப்பினும், பெரும்பாலோர் சர்க்யூட்-பிரேக்கர் நடவடிக்கைகளுக்குக் கட்டுப்படுவதாகவும், தொடர்ந்து அதை செய்வோம் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள சில பல்பொருள் அங்காடிகள், ஈர சந்தைகள் மற்றும் பூங்காக்களிலும் அவ்வப்போது வரிசைகள் மற்றும் கூட்டங்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிய தவறியவர்களுக்கு, முதல் குற்றத்திற்கு S$300 அபராதம் விதிக்கப்படும், மீண்டும் அதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் அதிக அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும். மோசமான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்படும்.

இதையும் படிங்க : அனைத்து கிளைகளிலும் உணவக சேவைகளை நிறுத்தி வைப்பதாக சிங்கப்பூர் மெக்டொனால்டு (McDonald’s) அறிவிப்பு..!