கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு..!

சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காத பொதுமக்களுக்கு $300 என சுமார் 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி முகநூல் பதிவில் (ஏப்ரல் 14) தெரிவித்துள்ளார்.

திரு மசகோஸ் செவ்வாயன்று வழங்கப்பட்ட அந்த 200 அபராதங்களை பற்றி கூறும் போது தமக்கு வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : பொது சுகாதார பராமரிப்பு துறையைச் சேர்ந்த மேலும் இரண்டு ஊழியர்களுக்கு COVID-19 உறுதி..!

பொதுமக்கள் சுற்றித்திரிவதை அதிகாரிகள் கண்டதாகவும், தடைசெய்யப்பட்ட இடங்களில் உட்கார்ந்து உணவு உண்பது, ஒன்றாக உடற்பயிற்சி செய்வது, மேலும் அந்த இடங்களை விட்டு வெளியேறும்படி கூறும் அதிகாரிகளிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதை பற்றியும் குறிப்பிட்டார்.

முடிந்தவரை வீட்டிலேயே தங்கி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Circuit breaker விதிமுறைகளை மீறும் முதல் முறை குற்றவாளிகளுக்கு $300 அபராதம் விதிக்கப்படும், மேலும் அதே குற்றத்தை மீண்டும் புரிவோருக்கு அதிக அபராதம் அல்லது மிக மோசமான விதிமீறலுக்கு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

மேலும், முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும் பொதுமக்களுக்கு $300 அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் ஓடுதல் போன்ற கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு..!