சிங்கப்பூரில் கொரோனாவால் மேலும் 17 பேர் உயிரிழப்பு!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (10/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (10/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 3,481 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 3,473 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், சமூக அளவில் 3,244 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 229 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 8 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,27,681 ஆக உயர்ந்துள்ளது.

ஒன்றாக கூடியதாக 10 பேரிடம் போலீசார் விசாரணை – காயம் ஏற்படுத்தியதாக ஒருவர் கைது

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,686 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. இதில் 261 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 137 பேர் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றன.

கொரோனா பாதிப்பால் மேலும் 17 பேர் உயிரிழந்தனர். சிங்கப்பூரில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 540 ஆக உயர்ந்துள்ளது.

சைக்கிளோட்டிகளுக்காக ‘Google Maps’- ல் புதிய அம்சம் அறிமுகம்!

கடந்த நாளில் 2,495 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களில் 433 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்” என்று சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.