சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியவர் மருத்துவமனையில் அனுமதி; கொரோனா வைரஸ் என அச்சம்?

Coronavirus suspected case in Tamilnadu
Coronavirus suspected case in Tamilnadu

தமிழ்நாடு: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மனைவியின் பிரசவத்திற்காக அவர் தன் சொந்த ஊருக்கு திரும்பினார்.

இதனை அடுத்து அவருக்கு தொண்டை வலி, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிகிச்சைக்காக அவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் S Pass என்னும் வேலை அனுமதி குறைக்கப்படும் – அரசு..!

அதன் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதுமில்லை எனவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : COVID-19 கொரோனா வைரஸ் தொற்று; விமான சேவையை குறைக்க முடிவு..!

இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் கூறுகையில், சிங்கப்பூரில் இருந்து வந்த வாலிபர் தனி வார்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் போன்ற பரவும் தன்மையுடைய தொற்று காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தஞ்சையை பொறுத்தவரை யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை’’ என்றார்.