COVID-19 நோயாளிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைக்க Tanjong Pagar முனையத்தில் பெரிய இடவசதி..!

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், COVID-19 நோயாளிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைக்க டான்ஜோங் பகர் (Tanjong Pagar) முனையத்தில் ஒரு பெரிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மெகா தற்காலிக கட்டமைப்பு 15,000 பேர் வரை தங்கக்கூடியது என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் யூகித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் லாரி, டாக்ஸி மற்றும் கார் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!

புதன்கிழமை (ஏப்ரல் 22) நிலவரப்படி, முனையத்தில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வரிசை கூடாரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

துவாஸில் எதிர்கால மெகா துறைமுகத்திற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக, முனையத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் 2017ஆம் ஆண்டிலேயே மாற்றப்பட்டன.

கடந்த சில வாரங்களாக, ஆரோக்கியமான வெளிநாட்டுத் ஊழியர்களை தங்க வைப்பதற்காக அல்லது அவர்களை சமூக தனிமைப்படுத்தும் தளங்களாக மாற்றுவதற்காக அரசாங்கம் பல்வேறு இடங்களைத் சுத்தம் செய்து வருகிறது.

சிங்கப்பூரில் நண்பகல் நிலவரப்படி, புதிதாக 1,037 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 23) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 11,178ஆக உயர்ந்துள்ளது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம், மருத்துவ வசதிகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்படும் – அமைச்சர் சண்முகம்..!