COVID-19: வெளிநாட்டு தொழிலாளர் தங்களின் துறையைத் தவிர்த்து மற்ற துறைகளிலும் பணிபுரிய அனுமதி..!

வேலை அனுமதி வைத்திருக்கும் எந்தவொரு நாட்டினரும் புதன்கிழமை (ஏப்ரல் 1) முதல் பிற துறைகளில் வேலை பெற முடியும், அதாவது அவர்களின் தற்போதைய முதலாளிகள் மாறுவதற்கு ஒப்புக் கொள்ளும் வரை என்றும், மனிதவள அமைச்சகம் (MOH) புதன்கிழமை (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள், 40 நாட்களில் வேலை அனுமதி காலாவதியாகும் நிலையில் உள்ள ஊழியர்களை, எந்தவொரு துறையிலிருந்தும் வேலைக்கு அமர்த்தவும் அமைச்சகம் அனுமதிக்கும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு முதலாளிகள் ஒப்புதல் அளிக்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் 4வது நபர் மரணம்..!

COVID-19 தொற்றுநோய் சூழலில் அனைத்து துறைகளிலும் உள்ள நிறுவனங்களுக்கு அவர்களின் மனிதவள தேவைகளை நிர்வகிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதே இந்த இடைக்கால நடவடிக்கைகள் என்று அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

COVID-19 காரணமாக வேலை அனுமதி அட்டையை வைத்திருப்போர் ஒப்புதல் பெற்ற பிறகே சிங்கப்பூருக்குள் வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனுமதியின்றி பொதுக்கூட்டம்; போலீசார் விசாரணை..!

பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் நிறுவனங்கள் manpowerconnect@sbf.org.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம் அல்லது SBF வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

மேலும், 40 நாட்களில் வேலை அனுமதி காலாவதியாகும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விரும்புவோர் தங்கள் கோரிக்கைகளை ஆன்லைன் படிவம் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது மேலும் தகவலுக்கு MOM-இன் வலைத்தளத்தைப் பார்வையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இலவசமாக தொலைக்காட்சி சேனல்கள் வழங்கும் சிங்டெல்..!