கொரோனா வைரஸ்; பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வரும் முஸ்லிம்களுக்கு ஆலோசனை..!

கோவிட்-19 வைரஸ் சூழலில், சிங்கப்பூர் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக வரும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் அனைவரும் சொந்த தொழுகை விரிப்புகளைக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் தொற்று (COVID-19); 5 நாள் மருத்துவ விடுப்பு..!

மேலும் தொழுகைக்கு வரும் மற்றவர்களுடன் தொடர்பைக் குறைக்க, அவர்களுடன் கைகொடுப்பதையும் தவிர்க்குமாறும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) கேட்டுக்கொண்டுள்ளார்.

சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள அங்கூலியா பள்ளிவாசலில் புதுப்பிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு வருகை புரிந்த திரு மசகோஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

தொழுகைக்கு வருபவர்களை கொரோனா கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்க இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குப்பை தொட்டியில் கைவிடப்பட்ட குழந்தை; தாய் கைது..!

பள்ளிவாசலுக்கு தொழுகைகைக்கு செல்வோர் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்துக்கொள்வது வழக்கமான ஒன்று.

இந்நிலையில்,“தற்போதைய சூழலில், நாம் கைகொடுப்பதைத் தவிர்ப்போம். அப்படி செய்தால், உங்களது கைகளைக் கழுவிவிடுங்கள். அதுவரை கைகளால் முகத்தைத் தொடவேண்டாம்,” என்று திரு மசகோஸ் அறிவுறுத்தியுள்ளார்.