‘இந்த வேலையில் இருப்போர், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அவசியம்!’

File Photo

கொரோனா கிருமித்தொற்று பரிசோதனைகளைச் செய்வோருக்கான தேவை காலப்போக்கில் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகையில் அதிகமானோர், தடுப்பூசிப் போட்டு வருவது அதற்கு முக்கிய காரணம்.

கொரோனா பல தரப்பினரின் வாழ்க்கைக்கையையும் திருப்பிப் போட்டுள்ளது என்றால் மிகையாகாது. அந்த வகையில், சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாக கடை ஒன்றை நடத்தி வந்த பஹீமுக்கு, கொரோனா காரணமாக பொருளாதார ரீதியிலான கடுமையான சவால்களை சந்தித்தால் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதைத் தொடர்ந்து, வேறு வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்தவரின் கண்ணில் பட்டது கிருமித்தொற்று பரிசோதனை செய்யும் வேலை. பரிசோதனைகளை மேற்கொள்வது, எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பத்திரப்படுத்துவது, பரிசோதனைக்காக வருவோரைக் கையாள்வது முதலிய அம்சங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவிட்- 19 சம்பவத்தால் பிரபல உணவகம் தற்காலிகமாக மூடல்!

இது குறித்து பஹீம் கூறுகையில், “இது ஒரு புதிய வேலை. எனக்கு ஆரம்பத்தில் பயமாக இருந்தது. எனக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுவிடுமோ? வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்குப் பரவி விடுமோ என்று பயம் இருந்தது. ஆனால், எங்களுக்குத் தொற்று பரவாமல் இருக்க, முழுமையான பாதுகாப்பு உடையை அணிந்து வேலை செய்கிறோம். அதனால் நாம் பாதுகாப்பாகதான் இருக்கிறோம் என்ற உணர்வு வந்தது” என்று கூறினார்.

அதேபோல், படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் பயில்நிலைப் பயிற்சிக்குச் செல்ல காத்திருந்தார் சிங்கப்பூரைச் சேர்ந்த காயத்ரி. எல்லை கட்டுப்பாடுகள் காரணமாக அது இயலவில்லை. அதனால் கிருமித்தொற்றுப் பரிசோதனையாளர் பணியை ஏற்றுக் கொண்டார். ஓராண்டுக்குள், கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்வோருக்குப் பயிற்சி அளிக்கும் மேற்பார்வையாளராக இவர் பதவி உயர்வு பெற்றார்.

“சிங்கப்பூர், திருச்சி இடையே கூடுதல் விமானச் சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

இது குறித்து காயத்ரி கூறுகையில், “நான் மருத்துவத்துறையில் படிக்கவில்லை; தாதியும் அல்ல. அதனால் இதை என்னால் செய்ய முடியுமா என்று யோசித்தேன். முதல் முதலாக ஒருவரிடம் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொண்டபோது, கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. பரிசோதனை செய்யும்போது, பத்திரமாக செய்ய வேண்டும். அதுதான் சவாலாக இருந்தது. ஆனால் போகப் போகப் பழகிவிட்டது. இந்த துறையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு இன்னும் நல்ல முறையில் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்” என்றார்.

சுய பரிசோதனை கருவிகளும் இப்போது எளிதில் கிடைக்கின்றன. பரிசோதனைகளைச் சொந்தமாக செய்துக் கொள்ளவும் மக்கள் பழகி வருகின்றனர். அது தவிர கிருமித்தொற்றைக் கண்டுபிடிக்கும் புதிய புதிய கருவிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதனால் இந்த வேலையில் இருப்போரிடம் இதே துறையில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

சிங்கப்பூரில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டது!

தற்போதைய சூழலில் கிருமித்தொற்றுப் பரிசோதனையாளர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. இந்த வேலையில் இருப்போர், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அவசியம் என்கின்றனர் மனிதவளத்துறை நிபுணர்கள்.