மகள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற தந்தை… எதிர்க்கும் தாய் – நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!

Professor Dan said the vaccines approved for use in crisis situations in Singapore, such as "Pfizer-Bio-Entech" and "Moderna", are safe and effective.

சிங்கப்பூரில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து பகுதிகளிலும் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ள, அதேவேளையில் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இதுவரை சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 82%- க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்.

பாரா ஒலிம்பிக்கில் ஐந்து முறை தங்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அரசு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள், சிங்கப்பூர் வாசிகள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்ட முதியவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக நீதிமன்றத்தில் வித்தியாசமான வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் தனது மனைவியை கடந்த 2015- ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதையடுத்து, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருப்பினும், அவர்களது மகள் தந்தை, தாய் இருவரின் அரவணைப்பிலும், பாதுகாப்பிலும் உள்ளார். தங்கள் மகளுக்கு தேவையான அனைத்தையும் இருவரும் செய்து வந்தனர். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் கான் கிம் யோங்!

இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர், தனது 16 வயது மகளையும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு, அவரது முன்னாள் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

பலமுறை தனது முன்னாள் மனைவியுடன் கலந்து பேசிய பின்பும், ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள நபர், தனது மகளின் தடுப்பூசி விவகாரத்தில் முடிவெடுக்கும் உரிமையை தனக்கு வழங்கக் கோரியும், தனது மகளை தடுப்பூசிப் போட்டுக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது!

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதுபோன்ற வழக்கில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

இதனிடையே, அவரது மகளும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள விரும்புவதாகக் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.