அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் கான் கிம் யோங்!

COVID-19: Singapore must be prepared for second wave of infections

சிங்கப்பூர் அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கான் கிம் யோங் (Minister for Trade and Industry Gan Kim Yong) நான்கு அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று (06/10/2021) முதல் வரும் அக்டோபர்- 9- ஆம் தேதி வரை அமைச்சர் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் வருகையாளர்களுக்கான தடை நீட்டிப்பு!

அந்த அறிவிப்பில், “அமைச்சரின் அமெரிக்கா நாட்டு பயணம், சிங்கப்பூருக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான பொருளாதார உறவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டனில் (Washington DC), அமெரிக்காவின் வர்த்தகச் செயலாளர் ஜீனா ராய்மொண்டோ (US Commerce Secretary Gina Raimondo) மற்றும் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி கேத்ரீன் டாய் (US Trade Representative Katherine Tai) உட்பட அமெரிக்க அரசு நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளை அமைச்சர் கான் கிம் யோங் நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

திருத்தியமைக்கப்பட்ட பொருள், சேவை வரி மசோதா குறித்து விரிவாகப் பார்ப்போம்!

அதேபோல், சிங்கப்பூர், அமெரிக்க வர்த்தக தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமைச்சர், சிங்கப்பூரில் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் அழைப்பு விடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, வாஷிங்டனின், அமெரிக்க வர்த்தகச் சபை (US Chamber of Commerce) மற்றும் யுஎஸ்-ஆசியான் வணிக கவுன்சில் (US- ASEAN Business Council) ஏற்பாடு செய்துள்ள வணிகம் தொடர்பான கூட்டங்களில் அவர் கலந்துக் கொண்டு உரையாற்றவிருக்கிறார்.

அமெரிக்கா சிங்கப்பூரின் முதன்மையான வர்த்தகப் பங்காளியாகவும், பொருட்களின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்குதாரராகவும், மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராகவும் உள்ளது.

பாரா ஒலிம்பிக்கில் ஐந்து முறை தங்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அரசு!

நியூயார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் கான் கிம் யோங் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.