போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது!

சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது, முக்கிய சாலைகளின் சந்திப்பில் வாகன தணிக்கையிலும், துவாஸ் சோதனைச் சாவடியில் வரும் வாகனங்களையும் அதிரடியாக சோதனை செய்து வருகின்றன. இதில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் சம்பவமும் தொடர் கதையாகி உள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட பொருள், சேவை வரி மசோதா குறித்து விரிவாகப் பார்ப்போம்!

அந்த வகையில், மலேசியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் ஒன்றை கடந்த ஜூலை மாதம் முதல் சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்த கும்பல் சிங்கப்பூரில் உள்ள சரக்குகளை அனுப்பும் நிறுவனங்களைக் கொண்டு சிங்கப்பூரில் இருந்து மற்ற நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள், மலேசியா நாட்டு போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், மலேசிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 24- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

பாரா ஒலிம்பிக்கில் ஐந்து முறை தங்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அரசு!

அப்போது, கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும் போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் ஒரு ஆண் நபர், நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேரை ராயல் மலேசியன் காவல்துறையினர் (Royal Malaysian Police) அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் அனைவரும் மலேசியர்கள் ஆவர். இவர்களின் வயது 21- க்கும் 71- க்கும் இடைப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடம் இருந்து பொட்டலமாக இருந்த சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களையும், பொம்மைகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர். அவற்றை தீவிரமாக சோதனையிட்டனர். அதில், ‘Methamphetamine’ என்ற போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூர், மலேசியா நாடுகள் தொடர்ந்து உளவுத் தகவல்களைப் பகிர்ந்துக் கொள்ளும் என்றும், எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கூட்டாக இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் கான் கிம் யோங்!

சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.