COVID-19: சிங்கப்பூரில் மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர்..!

COVID-19: 1,094 more patients have been discharged
COVID-19: 1,094 more patients have been discharged

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 1,094 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மே 16) குறிப்பிட்டுள்ளது.

அதாவது இந்த எண்ணிக்கை மூன்றாவது முறையாக 1000-ஐ கடந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 3 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்; வெளிநாட்டு ஊழியர்கள் 457 பேர் பாதிப்பு..!

மொத்தம் 8,342 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 1,111 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர் மேலும் 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 17,881 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – மொத்தம் 22ஆக உயர்வு..!