வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் சுமார் 40,000 ஊழியர்கள் வேலைக்கு திரும்ப அனுமதி..!

COVID-19: 40,000 migrant workers who live in dormitories cleared of virus – Josephine Teo
COVID-19: 40,000 migrant workers who live in dormitories cleared of virus – Josephine Teo (PHOTO: MCI)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் சுமார் 40,000 ஊழியர்களுக்கு COVID-19 தொற்று அறவே இல்லை. ஆகையால் அவர்கள் தங்கள் வேலைக்குத் திரும்பலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பணிக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்ட அந்த ஊழியர்களில் சுமார் 12,000 பேர் அத்தியாவசியச் சேவைகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஏற்கனவே இதர இட வசதிகளுக்கு இடம் மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று மனிதவள அமைச்சர் ஜோசப்பின் டியோ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வசதிகள், அவற்றின் வடிவமைப்பு ஆகியவற்றில் புதிய விதிமுறைகள்..!

சிங்கப்பூரில் இந்த கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிலிருந்து குணமடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு தற்காலிக இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

தங்கும் விடுதிகளைச் சேர்ந்த மேலும் 8,000 ஊழியர்கள் கிருமித்தொற்று இல்லாத நிலையில் சகஊழியர்களுடன் சேர்ந்து தங்கி இருக்கிறார்கள்.

மூன்று விடுதிகள், விடுதிகளாக மாற்றப்பட்ட 57 தொழிற்சாலைகள், கட்டுமான இடங்களில் உள்ள தற்காலிக தங்குமிடங்கள் அனைத்தும் |உட்பட 60 விடுதிகள் முதல் கட்டமாக கிருமிதொற்று இல்லா இடங்களாகப் பிரகடனப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பாக வேலைக்குத் திரும்புவதற்கு ஏதுவாக மருத்துவ ஆதரவு நடவடிக்கைகளை மேம்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழியர்கள் பல அணிகளாகப் பிரிந்து தங்களுடைய வேலைகளை பார்க்கவேண்டும் என்றும், விடுதிகளில் பாதுகாப்பு இடைவெளி கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : புற்றுநோயால் அவதிப்படும் வெளிநாட்டு ஊழியர்; கடைசி ஆசையை நிறைவேற்றிய சிங்கப்பூரர்கள்..!
.