சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 768 பேர் குணமடைந்துள்ளனர் – 26வது இறப்பு பதிவு..!

(Photo: Today)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 768 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 28,808 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : தம்மை நெகிழவைத்த 3 வெளிநாட்டு ஊழியர்கள் பற்றிப் பகிர்ந்துகொண்ட அமைச்சர் ஸாக்கி முகமது..!

மேலும் 228 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 11,135 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் COVID-19 தொற்று காரணமாக 73 வயதான ஆடவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26ஆக உள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!