சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 11,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

COVID-19: 842 more patients have been discharged from hospitals or community isolation facilities
COVID-19: 842 more patients have been discharged from hospitals or community isolation facilities (Photo: Straits Times)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 11,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 842 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மே 20) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்கதங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதி உடையோர் இனி சமூகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவர்..!

மொத்தம் 11,207 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 954 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 17,181 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகளில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படும்..!