தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதி உடையோர் இனி சமூகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவர்..!

No limit on group size masks not mandatory
(Photo: TODAY)

தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் இனி COVID-19 சம்பவங்களுக்கு ஆளானால், அவை சமூக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையில் சேர்க்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை (மே 20) தெரிவித்துள்ளது.

முன்னர் தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், ஒரு தனி பிரிவின் கீழ் அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்டனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகளில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படும்..!

கட்டுமானத் துறையில் உள்ள அனைத்து வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் S Pass வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் 20 முதல் மே 4 வரை கட்டாய வீட்டில் தங்கும் உத்தரவு கடந்த ஏப்ரல் 18 அன்று அறிவிக்கப்பட்டன.

கிருமித்தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் மே 1 அன்று, அந்த வீட்டில் தங்கும் உத்தரவு மே 18 வரை இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டது.

தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் கட்டுமான ஊழியர்களிடையே தொற்றுநோய்கள் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அச்சமயம் MOM கூறியது.

இந்நிலையில், ஊழியர்களின் வீட்டில் தங்கும் உத்தரவு காலம் முடிவடைந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை தெரிவித்தது.

ஆகவே, தங்கும் விடுதிகளுக்கு வெளியே கண்டறியப்பட்ட அனைத்து சம்பவங்களையும் (வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் உட்பட) சமூகத்தில் அளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வரையறைக்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் கிளெமென்டி HDB பிளாக்கில் தீ விபத்து – ஒருவர் மருந்துவமனையில் அனுமதி..!