COVID-19: சிங்கப்பூரில் இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

COVID-19: 862 more patients have been discharged in Singapore
COVID-19: 862 more patients have been discharged in Singapore

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 862 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 344 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிப்பு..!

மொத்தம் 15,738 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 607 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 15,592 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : தன்னுடைய கணவர் இறந்த செய்தியை கேட்டு, பேருந்தை நிறுத்திவிட்டு கதறி அழுத பேருந்து ஓட்டுநர்..!