COVID -19: சிங்கப்பூரில் தொலைபேசி வழியாக மனோவியல் ரீதியான ஆதரவு..!

COVID-19: Call helplines if you need emotional or psychological support in Singapore
COVID-19: Call helplines if you need emotional or psychological support in Singapore

சிங்கப்பூரில் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் உங்கள் மனநலத்தைக் கவனித்துக்கொள்ளுமாறு சிங்கப்பூர் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அன்பிற்குரியவர்களுடன் தொலைபேசி மற்றும் காணொளி அழைப்பு வழியாக தொடர்பில் இருங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். அவர்கள் பாதுகாப்பாக நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 897 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதுபற்றி பேச விரும்பினால், உதவி அமைப்புகளைத் தொலைபேசி வழியில் தொடர்புகொள்ளலாம்.

  • National CARE தொலைபேசி எண்: 1800-202-6868
  • மனநல மருத்துவமனையின் மனநல உதவிக்கான தொலைபேசி எண்: 6389-2222
  • சமூக மனோவியல் நடுவத்தின் இணையவழி ஆலோசனை சேவை: CPHOnlineCounselling.sg
  • PAVE தனிநபர் மற்றும் குடும்பப் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைந்த சேவைகள் 6555-0390
  • சமூக அமைப்புகளின் உதவித் தொலைபேசி எண்கள்: go.gov.sg/helplines

இதையும் படிங்க : சிறப்பு விமானம் மூலம் சவுதி அரேபியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 85 பேர் திரும்பினர்..!