சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு குறைந்த தினசரி தொற்று பாதிப்பு – தீவிர சிகிச்சை பிரிவில் 21 நோயாளிகள்

Photo credit: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் நேற்றைய (ஏப்ரல் 3) நிலவரப்படி, புதிதாக 3,743 பேருக்கு COVID-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதில் 3,674 பேர் உள்ளூர் அளவிலும், மீதமுள்ள 69 பேர் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரில் குவியும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் – ICA கூறிய தகவல் என்ன ?

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதிக்குப் பிறகு பதிவான தினசரி எண்ணிக்கையில் இது மிகக் குறைவான எண்ணிக்கை ஆகும்.

சிங்கப்பூரில் மேலும் 4 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர், இதனையும் சேர்த்து உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,276ஆக உள்ளது.

இதில் PCR சோதனைகள் மூலம் 565 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டன, அவற்றில் ஒன்பது பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.

சுகாதார அமைச்சின் (MOH) இணையதளத்தின் சமீபத்திய தொற்று புள்ளிவிவரங்களின்படி, மருத்துவமனையில் 507 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் மொத்தம் 56 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. மேலும், 21 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்… வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரன் – தற்கொலை செய்து கொண்ட மாணவி