சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று; மொத்த எண்ணிக்கை 300ஐ தாண்டியது..!

சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து, தினசரி சம்பவங்களில் இந்த எண்ணிக்கை தான் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் துவாஸ் தொழிற்சாலைப் பகுதியில் தீ விபத்து..!

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 313ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்களில், 33 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள், அதில் 30 சிங்கப்பூர்வாசிகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த சம்பவங்களில் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களும் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் புதிய சம்பவங்களில் 9 பேர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள்.

அதே போல், 5 பேருக்கு எதனுடனும் தொடர்பில்லை என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : மலேசியர்கள் வெளிநாடு செல்லத் தடை; கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடல்..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil