கொரோனா: சிங்கப்பூரில் தொடர்ந்து 8வது நாளாக சமூக பரவல் இல்லை!

COVID-19 cases in Singapore
COVID-19 cases in Singapore (Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் இன்றைய (நவ. 18) நிலவரப்படி, புதிதாக 5 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி பெறுவதில் சிங்கப்பூர் பின்தங்கி இருக்காது – பிரதமர் லீ

தனிமை

அவர்கள் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மொத்த பாதிப்பு

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை  58,135ஆக உள்ளது.

சமூக பரவல் இல்லை

சிங்கப்பூரில் தொடர்ந்து 8வது நாளாக சமூக பரவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப திறமைகளை ஈர்க்க உதவும் புதிய வேலை அனுமதி – பிரதமர் லீ

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…