கோவிட் -19 தடுப்பூசி பெறுவதில் சிங்கப்பூர் பின்தங்கி இருக்காது – பிரதமர் லீ

Singapore Covid-19 vaccine PM Lee
Singapore will not be 'last in queue' for Covid-19 vaccine - PM Lee (Photo: Reuters)

சிங்கப்பூர் பல்வேறு கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் ஏற்பாடுகள் செய்துள்ளதால், தடுப்பூசி மருந்துகள் கிடைத்தவுடன் வரிசையில் பின்தங்கி இல்லாமல் இருக்க அது உறுதி செய்யும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

நேற்று (நவம்பர் 17) ப்ளூம்பெர்க் செய்திக்கு அளித்த பேட்டியில், ஆசிய நாடுகள் தங்கள் மக்களை தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க வைப்பதில் மேற்கத்திய நாடுகளை விட அதிக வெற்றியைப் பெற்றுள்ளன என்பதை அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப திறமைகளை ஈர்க்க உதவும் புதிய வேலை அனுமதி – பிரதமர் லீ

உலகளாவிய தேவைக்கு மத்தியில் தடுப்பூசி பெறுவது குறித்து சிறிய நாடுகள் கவலைப்பட வேண்டுமா என்று ப்ளூம்பெர்க் தலைமை ஆசிரியர் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

கோவிட் -19ஐ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சிறந்த வழி, மிகவும் தேவையான இடங்களுக்கு தடுப்பூசி விநியோகிக்க முன்னுரிமை அளிப்பது என்று WHO (உலக சுகாதார அமைப்பு) குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆனால், உலக அளவில் (சுமார்) 200 நாடுகளில் அதனை செயல்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் மற்றவர்களுக்கு முன்பாக அந்த தடுப்பூசி பெறுவதற்கு முன்னுரிமை பெறுவதை உறுதிசெய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.

தடுப்பூசி மருந்து நிறுவனமான ஃபைசர் (Pfizer), அதன் தடுப்பூசியை 90 சதவீதம் செயல்திறன்மிக்க மருந்தாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-சிங்கப்பூர் விமானங்களின் குளிர்கால அட்டவணை: ஏர் இந்தியா.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…