COVID-19: சமூக பராமரிப்பு இடமாக சிங்கப்பூர் எக்ஸ்போ (Expo) செயல்படும்..!

COVID-19: Community isolation facility at Singapore Expo operational
COVID-19: Community isolation facility at Singapore Expo operational (Photo: MOH)

சிங்கப்பூர் எக்ஸ்போ (Expo) மற்றும் மேக்ஸ் அட்ரியா (MAX Atria) ஆகியவை சமூக தனிமைப்படுத்தும் இடமாக இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் செயல்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஆக அதிகமாக ஒரே நாளில் 287 புதிய COVID-19 சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: இந்தியரின் மரணத்துக்கு வைரஸ் தொற்று காரணம் இல்லை: சுகாதார அமைச்சகம் (MOH)..!

தினசரி COVID-19 தொற்று எண்ணிக்கையில் இது தான் மிக அதிகம். அதில் பல புதிய சம்பவங்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுடன் தொடர்புடையவை என்று MOH குறிப்பிட்டது.

புதிய சமூக பராமரிப்பு இடங்களில் சுமார் 480 பேரைப் பராமரிக்கும் வசதி உள்ளதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (ஏப்ரல் 9) தெரிவித்தார். தேவை அதிகரிக்கும்போது, படிப்படியாக அந்த வசதிகளும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய வசதிகள் முதலில் பாசிர் ரிஸில் உள்ள D’Resort NTUC-யில் அமைக்கப்பட்டது, அங்கு சுமார் 500 பேரை பராமரிக்கலாம்.

சிங்கப்பூர் எக்ஸ்போ இரண்டு வகையான நோயாளிகளை பராமரிக்கும், அதாவது குணமடையும் நோயாளிகள் மற்றும் ஆரம்ப கட்ட நோயாளிகள்.

வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர், அபாயகட்டத்தைத் தாண்டி குணமடைந்த பிறகும், அவர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதை இத்தகைய வசதிகள் உறுதிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியான சுங்கை தெங்கா லாட்ஜ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!