COVID-19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியான சுங்கை தெங்கா லாட்ஜ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

COVID-19: Sungei Tengah Lodge declared an isolation area under Infectious Diseases Act
COVID-19: Sungei Tengah Lodge declared an isolation area under Infectious Diseases Act

சிங்கப்பூரில் COVID-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நான்காவது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில் தனிமைப்படுத்தப்படும் தங்கும் விடுதி 506, Old Choa Chu Kang Road-இல் அமைந்துள்ள சுங்கை தெங்கா தங்கும்விடுதி ஆகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கடைவீட்டில் தீ விபத்து – காணொளி..!

சுங்கை தெங்கா லாட்ஜ் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ், COVID-19 தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்திற்காக ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதார அமைச்சின் (MOH) அறிவிப்பின்படி அரசாங்க அரசிதழ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை, இந்த சுங்கை தெங்கா விடுதியுடன், மேலும் 11 COVID-19 சம்பவங்கள் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

10 குடியிருப்பு தொகுதிகள் மற்றும் 25,000 ஊழியர்கள் வரை தங்கக்கூடிய இந்த தங்குமிடம், சிங்கப்பூரின் மிகப்பெரிய ஊழியர்கள் தங்குமிடமாகும் என்று அதன் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் சம்பந்தப்பட்ட தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

S11 Dormitory @ Punggol மற்றும் Westlite Toh Guan ஆகிய வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக கடந்த ஞாயிற்றுகிழமை அறிவிக்கப்பட்டது.

அந்த இரண்டு தங்குமிடங்களில் மொத்தம் 19,800 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 14 நாட்களுக்கு அவர்களின் அறைகளில் தங்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் இந்தியர் மரணம்..!