COVID-19: இந்தியரின் மரணத்துக்கு வைரஸ் தொற்று காரணம் இல்லை: சுகாதார அமைச்சகம் (MOH)..!

Indian did not die of COVID-19
Indian did not die of COVID-19

சிங்கப்பூரில் COVID-19 தொற்றில் 1604-வது சம்பவத்தில் பதிவான இந்தியர் ஒருவர் சோதனை முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அந்த முடிவுகளை பெறும் முன்னரே கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரின் மரணத்துக்கு COVID-19 தொற்று காரணம் இல்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் இந்தியர் மரணம்..!

கூடுதலாக, அவர் இருதய நோய் காரணமாக உயிரிழந்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

32 வயதான அவர் இந்திய நாட்டை சேர்ந்தவர். நீண்ட கால வருகை அனுமதியில் அவர் சிங்கப்பூரில் தங்கி வந்தார். அவருக்கு கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அவரிடம் COVID-19 தொற்று இருப்பது அவர் இறந்த பிறகு தான் உறுதி செய்யப்பட்டது.

அவரது மார்பு எக்ஸ்ரேவில் அவருக்கு நிமோனியா இல்லை என்றும் MOH தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு கூடுதல் ஏற்பாடு..!