தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை ஹோட்டல்களில் தங்க வைக்கத் திட்டம்..!

rental house flats apartment

சிங்கப்பூர் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகளில் COVID-19 உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

அதே வேளையில், வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைப்பதற்கான மாற்று இடங்களில் ஹோட்டல்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற மேலும் 100 பேருக்கு அபராதம்..!

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் (STB) ஹோட்டல் மற்றும் மனிதவள துறை இயக்குநர் டான் யென் நீ (Tan Yen Nee); அங்குள்ள மக்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தற்போதுள்ள COVID-19 தொற்று பரவுவதை குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்றார்.

மேலும், அவ்வாறு செய்வதன் மூலம் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளை மிகவும் கடுமையாகவும் திறம்படவும் செயல்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை மாற்றி தங்க வைக்க எத்தனை ஹோட்டல்கள் மற்றும் எந்த தங்குமிடங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை STB குறிப்பிடவில்லை.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழந்தார் – சுகாதார அமைச்சகம்..!