சிங்கப்பூரில் TraceTogether மூலம் சுமார் 25,000 பேர் அடையாளம்..!

COVID-19 identified TraceTogether
25,000 close contacts of COVID-19 cases identified using TraceTogether (Photo: Reuters/Edgar Su)

சிங்கப்பூரில் COVID-19 பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுமார் 25,000 பேர் ட்ரேஸ் டுகெதர் (TraceTogether) மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (Gan Kim Yong) நேற்று திங்களன்று (நவம்பர் 2) தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வேலையிழந்தவர்களுக்கு தலா S$500 உதவி வழங்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று உறுதி

அடையாளம் காணப்பட்ட நெருங்கிய தொடர்புகளில், சுமார் 160 பேருக்கு இறுதியில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது அவர்களை முன்கூட்டியே அடையாளம் காணவும், பின்னர் அவர்களை தனிமைப்படுத்தவும் உதவியதாக அவர் கூறியுள்ளார்.

இது வழக்கமான தடமறிதல் வழிமுறைகளை விட வேகமாக இருந்தது என்று திரு கன் நாடாளுமன்றத்தில் கூறினார்.

நாடாளுமன்ற கேள்வி

ட்ரேஸ் டுகெதர் சாதனங்கள் மூலம் எத்தனை சாதகமான சம்பவங்கள் வெற்றிகரமாக கண்காணிக்கப்பட்டுள்ளன, அவற்றின் விகிதத்தை அரசாங்கம் எவ்வாறு கண்காணிக்கிறது மற்றும் அவற்றை SafeEntryயுடன் ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

சாதனத்தை பெற்றவர்கள்

நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, 570,000 குடியிருப்பாளர்கள் இந்த சாதனத்தை பெற்றுள்ளனர் என்று திரு கான் கூறினார்.

அதே போல ரேஸ் TraceTogether செயலியை சுமார் 2.7 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றும் திரு கான் கூறினார்.

சிங்கப்பூரில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம், மரம் முறிந்து விழுந்தது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…