COVID-19: விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு எச்சரிக்கை; சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்..!

COVID-19: Jail, fines for employers who do not allow employees to work from home where possible

ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய சாத்தியங்கள் இருந்தும், அதற்கான வசதிகளை செய்து தராத முதலாளிகளுக்கு, தொற்று நோய்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் கீழ், சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

சாத்தியங்கள் இருந்தும் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊழியர்களை வழிநடத்த தவறிய அல்லது வேலையின் போது பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளை செயல்படுத்தாத முதலாளிகள் அபராதங்களை எதிர்கொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 129 பணியிடங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவுகள் – மனிதவள அமைச்சகம் அதிரடி..!

நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்த மாற்றங்கள், சிங்கப்பூரில் COVID-19 பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாயன்று, சாத்தியங்கள் உள்ள இடங்களில் தொலைதொடர்பு வசதிகளை அனுமதிக்காத நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவுகள் அல்லது பிற அபராதங்களை விதிக்கப்படலாம் என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ கூறியுள்ளார்.

மேலும், நிறுவனங்களை சோதனை செய்ய 100க்கு மேற்பட்ட அதிகாரிகளை பணியமர்த்த மனிதவள அமைச்சு (MOM) திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற காலகட்டத்தில் ஒவ்வொரு ஊழியரும் வீட்டிலிருந்து வேலை செய்ய தேவையான வசதிகளை ஒவ்வொரு நிறுவனமும் செய்துதர வேண்டும்.

வேலையிடங்களில் ஊழியர்களிடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு S$10,000 வரை அபராதம், ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : COVID-19 தொற்று: சிங்கப்பூரில் ஐந்தாவது நபர் மரணம்..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil