COVID-19: சிங்கப்பூரில் 15,000 கிலோ உணவை நன்கொடையாக வழங்கிய மெரினா பே சாண்ட்ஸ்..!

COVID-19: Marina Bay Sands donates 15,000kg of food to charity
COVID-19: Marina Bay Sands donates 15,000kg of food to charity (Photo: Marina Bay Sands)

மெரினா பே சாண்ட்ஸில் (MBS) உள்ள உணவகங்கள் கிட்டத்தட்ட 15,000 கிலோ உணவுப் பொருட்களை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.

COVID-19 வைரஸ் மேலும் பரவுவதை தடுப்பதற்காக நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒருங்கிணைந்த ரிசார்ட் ஒரு மாதம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 66 பேருக்கு COVID-19 தொற்று உறுதி..!

செய்தி வெளியீட்டில், MBS வளாகத்தில் உள்ள உணவகங்கள் ரொட்டி, காய்கறிகள், பழம், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் 3,600 முட்டைகளை, உணவு வங்கிக்கு நன்கொடையாக வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

அந்த தொண்டு அமைப்பு, உணவு விநியோகம் செய்பவர்களிடமிருந்து அதிகப்படியான உணவை சேகரித்து, அதை முதியோர் இல்லம், குடும்பச் சேவை நிலையங்கள் போன்ற அமைப்புகளுக்கு மீண்டும் விநியோகிக்கிறது.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட பிரபல மொபைல் கடை..!