கடல் துறை ஊழியர்களுக்கு கூடுதல் COVID-19 நடவடிக்கைகள்!

(Photo from Asiatec Website)

அண்மையில் கப்பல்களில் பணிபுரிந்த இரண்டு பேருக்கு COVID-19 உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கடல்துறை ஊழியர்களுக்கு சிறப்பு கிருமித்தொற்று சோதனை நடவடிக்கைகளை தொடங்குவதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

துறைமுக விமானிகள், மரைன் சர்வேயர்கள் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் ஊழியர்கள் ஆகியோருக்கு வரவிருக்கும் நாட்களில் கொரோனா கிருமித்தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்படும் என்று MOH கூறியுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் திரு லீ அவர்களின் 2021 புத்தாண்டு செய்தி!

அவர்களின் வழக்கமான சோதனைகளையும் தாண்டி கூடுதலாக சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

இந்த ஊழியர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுஆய்வு செய்வார்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இதில் மரைன் சர்வேயர் ஒருவருக்கும் மற்றும் ஹார்பர் பைலட் ஒருவருக்கும், சமீபத்தில் COVID-19 தொற்று அமைச்சகத்தால் உறுதிசெய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…