கோவிட் – 19 தொற்றுப் பரவலைக் கண்டறிய ஓர் புதிய காற்று கண்காணிப்புக் கருவி!

Photo: SCELSE

கோவிட் – 19 தொற்றுப் பரவலினால் ஏற்படக்கூடிய ஆபத்து பற்றி முன்கூட்டியே காட்டும் காற்றுக் கிருமி கண்காணிப்புத் தொழில்நுட்பம் மருத்துவமனைகளுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் நல்ல உபயோகமானதாக இருக்குமென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எதிர்ப்பு சக்தி இல்லாமல் எளிதாக தாெற்றுப் பரவக்கூடிய மக்களையும், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களையும் பாதுகாப்பதற்கு இக்கருவி பெரிதும் உதவுமென ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பூஸ்டர் தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டுமா?

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யாேங் லூ லின் பள்ளியையும், நன்யாங் தாெழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் சிங்கப்பூர் சுற்றுப்புற உயிராய்வுப் பொறியியல் நிலையத்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள், புதிதாக காற்றுக் கண்காணிப்பு கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கோவிட் – 19 தாெற்றை ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்த கிருமி காற்றில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இக்கருவி உதவும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை இந்த கண்காணிப்புத் தொழில்நுட்பம் கோவிட் – 19 நோயாளிகளுக்கான மருத்துவமனையில் 2 வார்டுகளில் வைத்து பரிசோதிக்கப்பட்டது.

செப்டம்பர் 14ஆம் தேதியன்று இண்டோர் என்ற அறிவியல் சஞ்சிகையில் அந்த பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டது.

காற்று கண்காணிப்புத் தொழில்நுட்பம் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுமென்று, சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழக நிலையத்தில் மூத்த ஆய்வாளராக பணியாற்றும் டாக்டர் இர்வான் லுகுங் தெரிவித்தார்.

மேலும் அதிகமான கோவிட் – 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்ற மருத்துவமனையில் காற்று கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் தாெற்றுக் கிருமியை முன்னதாகவே கண்டறிந்து மருத்துவ ஊழியர்களைப் பாதுகாக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இது தாெடர்பாக தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் தனது குழு சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த காற்று கண்காணிப்பு தாெழில்நுட்பம், கழிவுநீரை பரிசோதிக்கும் நடைமுறைக்கு உறுதுணையாக இருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் அறிவியல் கண்டுபிடிப்பு ஆய்வுச் செயல்திட்ட இணைப் பேராசிரியர் டேவிட் ஆலன் தெரிவித்தார்.

இவ்வேளையில் இசை நிகழ்ச்சிகள், விமானங்கள் போன்றவற்றில் இக்கண்காணிப்புக் கருவியைப் பயன்படுத்த முடியும் என்று இந்த செயல்திட்டத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் பால் தம்பையா கூறினார்.

கோவிட்-19 நோயாளி இல்லை என்று நினைக்கும் இடத்தில் இந்தக் கருவியைப் பொருத்தலாம். அந்த இடத்தில் உள்ள காற்றில் கிருமி இருக்குமானால் அதை இக்கருவி கண்டுபிடித்துவிடும்.

இந்தக கருவியின் செயல்திறன், ஒரே நேரத்தில் 30 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதற்கு சமமானது என்றும், 30 பேருக்குப் பரிசோதனை செய்வதற்கு பதில் இக்கருவியைப் பயன்படுத்துவதே போதுமானது என்றும் பேராசிரியர் பால் தம்பையா தெரிவித்தார்.

நவம்பர் 15 முதல், இந்த நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே சிறப்பு பயண ஏற்பாடு!