பூஸ்டர் தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டுமா?

(photo: mothership)

கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியை அனைத்து மக்களும் போட்டுக்காெள்ள வேண்டிய அவசியம் தற்போது இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் வல்லுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் வயதான முதியவர்கள் பலருக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால், அவர்களின் எதிர்ப்புசக்தியை நீண்ட நாட்களுக்கு சமநிலையில் வைத்துக் கொள்ள பூஸ்டர் தடுப்பூசி உதவும் என அவர் விளக்கினார்.

உலகின் மிக பாதுகாப்பான நகரங்களில் சிங்கப்பூருக்கு 3வது இடம்!

பூஸ்டர் தடுப்பூசியின் ஆற்றல் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்தும் புள்ளிவிவரங்களில் அதிகமானவை பிரிட்டன், சிலி, இஸ்ரேல் உள்ளிட்ட ஒரு சில நாடுகளைச் சேர்ந்தவையாகத்தான் இருக்கின்றது.

இத்தகவலை டாக்டர் செளமியா சுவாமிநாதன், சிங்கப்பூர் சுகாதார உயிரியல் மருத்துவப் பேரவையில் உரையாற்றியபோது எடுத்துரைத்தார்.

தற்போது உபயோகிக்கக்கூடிய தடுப்பூசிகளில் பெரும்பாலானவை கடுமையான பாதிப்புகளில் இருந்து மக்களை அதிகமாக பாதுகாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்கள் போன்ற சிலருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுவதாகவும் டாக்டர் செளமியா தெரிவித்தார்.

நவம்பர் 15 முதல், இந்த நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே சிறப்பு பயண ஏற்பாடு!