COVID-19 தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றி 11 நாட்களுக்கு பிறகு வைரஸ் தொற்றாது – சிங்கப்பூரில் ஆய்வு..!

COVID-19 patients not infectious after 11 days of getting sick, finds study
COVID-19 patients not infectious after 11 days of getting sick, finds study (Photo: Reuters)

COVID-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறிகுறிகள் ஏற்பட்ட 11வது நாளில் இருந்து அந்த கிருமித்தொற்றானது மற்றவர்களுக்கு தொற்றாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதாவது இந்த ஆய்வு குறித்த அறிக்கையை, சிங்கப்பூரின் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் மற்றும் மருத்துவக் கழகம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளது, மேலும் அதில் அந்த புதிய ஆய்வை பற்றியும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

இதன் காரணமாக COVID-19 தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதில் மாற்றம் செய்யவேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்றவர்களுக்குக் இந்த வைரஸ் தொற்றை பரப்பும் இயல்பின் அடிப்படையில் இனி அவர்கள் வீடு திரும்புவது முடிவுசெய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வைரஸ் சோதனையில் அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிசெய்வதற்கு பதிலாக தொற்றை பரப்பும் இயல்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படலாம்.

கூடுதலாக இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பு மூன்று நாள்கள் வரை மற்றவர்களுக்குக் அதனை பரப்பமுடியும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது என்று செய்தி மீடியா கார்ப் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : தன்னுடைய கணவர் இறந்த செய்தியை கேட்டு, பேருந்தை நிறுத்திவிட்டு கதறி அழுத பேருந்து ஓட்டுநர்..!