COVID-19: சிங்கப்பூரில் வாரத்திற்கு ஒரு நாள் வீட்டில் இருந்து கற்றல் வகுப்பு..!

COVID-19: Schools to conduct home-based learning once a week from April

ஏப்ரல் முதல், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட கல்வி நிறு­வ­னங்­களில் உள்ள மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் கற்றல் வேண்டும் என்று கல்வி அமைச்சகம் (MOE) வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாடுகளில் இருந்து வரும் COVID-19 சம்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வைரஸ் பரவல் ஏற்படுவதைத் தடுப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிய பாதுகாப்பு நடவடிக்கை; அபராதம் விதித்ததாகப் பரவும் வதந்தி..!

மேலும், பள்ளிகள் மூடப்படவில்லை என்று திரு ஓங் செய்தியாளர்களிடம் கூறினார். வீட்டு அடிப்படையிலான கற்றலை அறிமுகப்படுத்துவதற்கு பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகள் புதன்கிழமைகளிலும், மேல்நிலைப் பள்ளிகள் வியாழக்கிழமைகளிலும், ஜூனியர் கல்லூரிகளும் மையப்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்ககள் வெள்ளிக்கிழமையும் வீட்டில் கற்றல் முறை­யில் பாடங்­க­ளைக் கற்பார்கள் என்று MOE தெரிவித்துள்ளது.

சுமார் நான்கு முதல் ஐந்து மணிநேர வீட்டு கற்றல் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் நடப்புக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிமுறை; மீறுபவர்களுக்கு சிறை மற்றும் அபராதம்..!