COVID-19: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் பயணிகள் எண்ணிக்கை 60% சரிவு..!

COVID-19: SIA Group reports 60% decline in passenger carriage

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) குழுமத்தின் சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை விகிதம் கடந்த மார்ச் மாதத்தில் 60.4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

ஏனெனில், COVID-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் ஒட்டுமொத்த பயண தேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆக அதிகமாக ஒரே நாளில் 447 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பயணிகள் விகிதம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 57.2 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும், சில்க் ஏர் பயணிகள் விகிதம் 71.1 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஸ்கூட்டின் பயணிகள் விகிதமும் 68.3 சதவீதம் குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-2020 நிதியாண்டின் நான்காம் காலாண்டில், உலகளாவிய COVID-19 பரவல் காரணமாக இதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டது.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதன் வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று SIA குழுமம் கூறியுள்ளது.

மேலும், மார்ச் மாத இறுதிக்குள், SIA மற்றும் சில்க் ஏர் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த திறனில் 96 சதவிகிதம் குறைக்கப்பட்டன.

அதே நேரத்தில் ஸ்கூட் அதன் நெட்வொர்க்கில் 98 சதவீத சேவையை நிறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு..!