முஸ்தஃபா சென்டர் உள்ளிட்ட இடங்களுக்கு தொற்று பாதித்தவர்கள் சென்றுள்ளனர்..!

Marina Bay Sands, Mustafa Centre visited COVID-19
(PHOTO: Mustafa Centre)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், முஸ்தஃபா சென்டர் இடம்பெற்றுள்ளதாக MOH தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் கிழக்கு பகுதியை மேலும் மெருகூட்டும் புதிய பசுமைப் பாதை திட்டம்..!

மெரினா பே சாண்ட்ஸில் உள்ள Rasapura Masters உணவு நிலையத்திற்கும் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வெவ்வேறு நாட்களில் இரண்டு முறை சென்றுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஒருவர், கடந்த செப்டம்பர் 24 அன்று பூன் லேவில் உள்ள STA வாகனச் சோதனை மையத்திற்கு சென்றுள்ளார் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய பட்டியல் பின்வருமாறு:
Table: MOH

கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்குத் தகவல் அளிக்கப்படும் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் 162 சந்தேக நபர்கள் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…