“இந்திய வெளிநாட்டு ஊழியர்களை நாங்கள் கவனித்துக்கொள்வோம்” – இந்திய பிரதமர் திரு மோடிக்கு திரு லீ உறுதி..!

உத்தரபிரதேசத்தில் அதிக முதலீடு செய்யும் சிங்கப்பூர் - இந்திய வளர்ச்சிக்கு உதவும்!
Photo: Lee Hsien Loong/FB)

COVID-19 தொற்றுநோய் பரவல் மத்தியில், சிங்கப்பூர் இந்திய நாட்டு ஊழியர்களை கவனித்துக்கொள்ளும் என்று பிரதமர் லீ ஹூசியன் லூங், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (ஏப்ரல் 23) உறுதியளித்தார்.

இன்றைய முகநூல் பதிவில், திரு லீ, திரு மோடியுடன் தனது தொலைபேசி உரையாடல் குறித்து குறிப்பிட்டார், இரு தலைவர்களும் அவர்களின் நாடுகளில் தற்போதைய COVID-19 சூழலை குறித்து விவாதித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில் இந்தியர் உயிரிழப்பு..!

​​மேலும் திரு லீ சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள், பணியாற்றுவதற்காக செய்த தியாகங்களை ஒப்புக் கொண்டதாக குறிப்பிட்டார்.

சிங்கப்பூரர்களைப் பராமரிப்பதைப் போலவே, இங்குள்ள இந்திய வெளிநாட்டு ஊழியர்களையும் கவனித்துக்கொள்வோம் என்று திரு மோடிக்கு உறுதியளித்ததாக திரு லீ கூறினார்.

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவதற்கு, வெளிநாட்டு ஊழியர்கள் தனிப்பட்ட தியாகங்களைச் செய்துள்ளதாகவும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19 நோயாளிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைக்க Tanjong Pagar முனையத்தில் பெரிய இடவசதி..!