வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளில் COVID-19 சோதனை செப்டம்பர் வரை நடைபெறலாம்: கான் கிம் யோங்

COVID-19 testing at migrant worker dorms may take up to September: Gan Kim Yong
COVID-19 testing at migrant worker dorms may take up to September: Gan Kim Yong (PHOTO: Suhaimi Abdullah/Getty Images)

சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு செயல்திறன்மிக்க COVID-19 சோதனைகள் நிறைவடைவதற்கு செப்டம்பர் வரை ஆகலாம் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

புக்கிட் படோக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை நேற்று வியாழக்கிழமை (ஜூன் 4) நாடாளுமன்றத்தில் எழுப்பிய துணை கேள்விக்கு திரு.கான் பதிலளித்தார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் வீராசாமி ரோட்டில் உள்ள கடைவீட்டில் வசிக்கும் 13 பேர் பாதிப்பு..!

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு COVID-19 சோதனைகள் முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்றும், இது சிங்கப்பூரின் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான கட்டம் 2 அல்லது 3 ஆம் காலக்கெடுவை பாதிக்குமா என்றும் பிள்ளை கேட்டார்.

தனது பதிலில், இந்த சோதனைகள் சிறிது காலம் எடுக்கும், ஏனெனில் அரசாங்கம் அதை முறையாகவும் கவனமாகவும் செய்ய வேண்டும் என்று கான் தெரிவித்தார்.

இந்த COVID-19 சோதனைகள் முடிய ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் வரை ஆகலாம் என்றும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

COVID-19 பரவலை கட்டுப்படுத்த, அதிகமானோர் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இதில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தி கூறினார்.

சமூக அளவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தால், சிங்கப்பூரில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கட்டம் கட்டமாகத் தளர்த்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 4 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்; 300க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!