COVID-19: சிங்கப்பூரில் 28,000க்கும் மேற்பட்டோர் முழுமையாக மீண்டுள்ளனர் – 3 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!

COVID-19: Three clusters were found at Singapore
COVID-19: Three clusters were found at Singapore (Photo: NYTimes)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 754 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 28,040 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு மனிதவள அமைச்சகம் அறிவுரை..!

மேலும் 239 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 11,546 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்கள்

சிங்கப்பூரின் நேற்றைய நிலவரப்படி, புதிதாகப் பாதிக்கப்பட்ட 463 பேரில் 445 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

தங்கும் விடுதிகளில் மேலும் 3 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை,

  • 55 Genting Lane
  • 21 Tuas View Loop
  • Stirling Residences கட்டுமான தளம்

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 400,000 குடும்பங்களுக்கு S$20 மில்லியன் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும்..!