சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு மனிதவள அமைச்சகம் அறிவுரை..!

சிங்கப்பூரில் “சர்க்யூட் பிரேக்கர்” என்னும் அதிரடி நடவடிக்கை முதற்கட்டமாக தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்கள் தங்கள் ஓய்வு நாட்களில் தொடர்ந்து வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) சனிக்கிழமை (ஜூன் 13) தெரிவித்துள்ளது.

கடந்த வார இறுதியில் சிட்டி பிளாசா (City Plaza), லக்கி பிளாசா (Lucky Plaza) மற்றும் Peninsular பிளாசா போன்ற ஹாட்ஸ்பாட்களில் சில வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்கள் ஒன்றுகூடியதை கண்டதை தொடர்ந்து முதலாளிகளுக்க்கு இத்தகைய ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 400,000 குடும்பங்களுக்கு S$20 மில்லியன் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும்..!

வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்கள் தங்கள் ஓய்வு நாட்களில் தொடர்ந்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று MOM அந்த ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் உணவு வாங்குவதற்கும் வெளியே செல்ல முடியும் என்பதை குறிப்பிட்ட அமைச்சகம், ஆனால் அவர்கள் நண்பர்களைச் சந்திக்கவோ அல்லது பொது இடங்களில் ஒன்றுகூடவோ அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.

அவர்கள் தங்களின் தேவை முடிந்த பிறகு உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக COVID-19 தொற்று பாதித்தவர்கள் சென்று வந்த மேலும் 3 இடங்கள் வெளியீடு..!