மலேசியாவின் குறிப்பிட்ட மாநிலத்திலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு..!

COVID-19 travellers

சபாவுக்கு சமீபத்திய பயணம் மேற்கொண்டு, சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளும் விரைவில் 14 நாள் தங்கும் கட்டாய உத்தரவை, அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகளில் நிறைவேற்றவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது அக்டோபர் 14ஆம் தேதி, இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் அந்த அனைத்து பயணிகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான உணவகம் – துவங்கிய அரை மணி நேரத்தில் முடிந்த முன்பதிவு..!

சிங்கப்பூரின் எல்லை குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் COVID-19 சோதனைகளில் பல மாற்றங்கள் இன்று (அக். 12) சுகாதார அமைச்சினால் (MOH) அறிவிக்கப்பட்டுள்ளன.

சபாவில் அண்மையில் COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சமீபத்திய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்று MOH தெரிவித்துள்ளது.

இதில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஹாங்காங்கிற்கு சமீபத்திய பயணம் மேற்கொண்ட பயணிகளை மற்ற மாற்றங்கள் பாதிக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இன்று 4 பேருக்கு கொரோனா – தங்கும் விடுதியில் ஒரு பாதிப்பு..!

சிங்கப்பூரின் எல்லைகளை மீண்டும் பாதுகாப்பான முறையில் திறக்க இந்த தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை மிகவும் முக்கியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) விசா இடைநீக்கத்தை நீக்கி, புதிய விசாக்களை வழங்குவதை மீண்டும் தொடங்கும்.

இருப்பினும், விசா உள்ளோர் சிங்கப்பூர் வருவது என்பது நிச்சமயல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருடன் மீண்டும் பயணத்தை தொடங்க மேலும் ஒரு நாடு இணக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…