சிங்கப்பூரில் நீண்டகால வேலை அனுமதி உடையோருக்கு தடுப்பூசி இலவசம்!

covid-19 vaccination Singapore
(Photo: MCI)

அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும் பட்சத்தில், 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகள் வந்துவிடும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (Gan Kim Yong) கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் அவ்வப்போது புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்றும் திரு கான் எச்சரித்தார்.

மேலும், டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கிய 3வது கட்டத்தில் புதிய கொரோனா கிருமித்தொற்று மற்றும் பரவல் ஏற்படும் அபாயத்தை நாடு தொடர்ந்து எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கவனத்திற்கு… ஏர் இந்தியா!

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தங்களது தடுப்பூசிகளை போட்டுகொண்டுள்ளனர், மேலும் மற்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கிளினிக்குகள் மற்றும் தடுப்பூசி நிலையங்களை அதிகாரிகள் தயார் செய்யவதாவும் திரு கான் கூறினார்.

இந்த தடுப்பூசி அனைத்து சிங்கப்பூரர்களுக்கும், நீண்ட கால வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் உட்பட நீண்டகால குடியிருப்பாளர்களுக்கும் இலவசம்.

அதாவது, வேலை அனுமதி (Employment Pass), S- Pass, Work Permit, வெளிநாட்டு பணிப்பெண்கள், சார்பு அனுமதி, நீண்ட கால வருகை, மாணவர் அனுமதி வைத்திருப்போர் ஆகியோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருமாறு அனைவரையும் ஊக்குவிப்பதாகவும், இதனால் தடுப்பூசி வழங்கலை அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த குழந்தையை மீட்ட வெளிநாட்டு ஊழியர் – காணொளி

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…