COVID-19 தடுப்புமருந்து முஸ்லிம்கள் பயன்படுத்த ஏற்றதா? – MUIS விளக்கம்!

COVID-19 vaccine permissible Muslim
COVID-19 vaccine is permissible for Muslim - MUIS (PHOTO: REUTERS/Dado Ruvic/Illustration)

COVID-19 தடுப்பூசி மருந்துகள் முஸ்லிம் சமுதாய மக்கள் பயன்படுத்த உகந்தது என அனுமதிக்கப்படுவதாக சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (MUIS) ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) தெரிவித்துள்ளது.

தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதும் அதனை ஊக்குவிப்போம் என்று அது தெரிவித்துள்ளது.

உலகின் வலிமையான காந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர்!

மேலும், தடுப்பூசி கிடைத்தவுடன் அதனை போட்டுக்கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துவதாகவும், மேலும் அதனை ஊக்குவிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

இது உலகளாவிய கொரோனா தொற்றுநோய்களின் சூழலில் உயிர்களைப் பாதுகாப்பதற்கான அடிப்படைத் தேவையாகும் என்று MUIS குறிப்பிட்டுள்ளது.

ஊடக வெளியீட்டில் இந்த COVID-19 தடுப்பூசி குறித்த தனது சமய நிலைப்பாட்டை இஸ்லாமியச் சமய மன்றம் வெளியிட்டது.

இஸ்லாமிய சட்டம், மனித வாழ்வின் புனிதத்தன்மை மற்றும் அவர்களின் பாதுகாப்பு, மேலும் வாழ்வாதாரங்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அது தெரிவித்துள்ளது.

கூடுதலாக, தடுப்பூசி மருத்துகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் அனுமதி குறித்தும் MUIS கருத்தில் கொண்டுள்ளது.

கோவையிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கான விமானங்கள் 3 மடங்கு அதிகரிப்பு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…