ஆசியாவில் முதல் நாடாக சிங்கப்பூர் வந்தடைந்த COVID-19 தடுப்பூசி மருந்து!

COVID-19 vaccines arrives in Singapore
COVID-19 vaccines arrives in Singapore (PHOTO: Matthias Ang)

COVID-19 தடுப்பூசி மருந்துகளின் முதல் தொகுதி திங்கள்கிழமை (டிசம்பர் 21) மாலை சிங்கப்பூரை வந்தடைந்துள்ளது.

ஃபைசர் (Pfizer) மற்றும் பயோஎன்டெக் (BioNTech) உருவாக்கிய தடுப்பூசி மருந்துகளை பெறும் முதல் ஆசிய நாடு சிங்கப்பூர் ஆகும்.

உணவில் கரப்பான் பூச்சி… சிங்கப்பூர் உணவு அமைப்பு நடவடிக்கை!

இந்த தடுப்பு மருந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) 747-400 சரக்கு விமானத்தில் வந்தடைந்தது.

அதாவது அந்த விமானம், ஞாயிற்றுக்கிழமை பிரஸ்ஸல்ஸில் (Brussels) இருந்து புறப்பட்டு திங்கள்கிழமை இரவு 7.36 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த தடுப்பூசி மருந்துகளை போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் பெற்றார், பின்னர் அவைகள் SATSஇன் குளிர் கிடங்கு வசதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

COVID-19 தடுப்பூசி மருந்துகளுக்கான ஒப்புதலை Pfizer மற்றும் BioNtech நிறுவனங்களுக்கு சுகாதார அறிவியல் ஆணையம் அளித்திருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் முன்னர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

திருச்சி-சிங்கப்பூர் இருவழி செல்லும் பயணிகளுக்கு தினசரி விமானங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…