உணவில் கரப்பான் பூச்சி… சிங்கப்பூர் உணவு அமைப்பு நடவடிக்கை!

(Photo: Stomp)

Killiney ரோட்டில் உள்ள உணவகம் ஒன்று அதன் கடையை சுத்தமாக வைத்திருக்க தவறியதற்காக, சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 14) பிற்பகல், 65 Killiney ரோட்டில் உள்ள Royal Prata & Curries கடைக்கு குமார் சில சகாக்களுடன் சென்றதாக Stomp தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் Work pass, Work permit வைத்திருப்பவர்களுக்கு புதிதாக தொற்று!

“நாங்கள் அங்கு சென்று சாப்பாட்டு ஆர்டர் செய்தோம். என் சக ஊழியர் ஒருவர் அவருடைய உணவை சாப்பிட்டுவிட்டு முடிக்கும் நேரத்தில், ​​அவருடைய கறியில் ஒரு கரப்பான் பூச்சியைக் கண்டோம்” என்று குமார் கூறியுள்ளார்.

“மேலாளரிடம் இது பற்றி தெரிவிக்க நாங்கள் மீண்டும் உணவகத்திற்குச் சென்றோம். ஆனால் மேலாளர் அங்கு இல்லை, ஊழியர்களில் ஒருவர் வெளியே வந்து, நாங்கள் எடுத்த படங்களை நீக்குமாறும், அது அவர்களின் உணவகத்தின் நற்பெயரைப் பாதிக்கும் என்று கூறினார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாங்கள் புகைப்படங்களை நீக்கவில்லை, இது பற்றி SFA-விடம் புகார் கொடுப்போம் என்று அவரிடம் சொன்னோம். அதற்கு அவர் மன்னிப்பு கேட்டு, பணத்தை திருப்பித் தருவதாக எங்களிடம் கூறினார் ” என்றார்.

பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது!

அதனை அடுத்து, குமாரின் சகா ஒருவர் இந்த சம்பவம் பற்றி அதே நாளில் SFAவிடம் புகார் அளித்தார். பின்னர், புகார்களை பெற்றபின் உணவு நிறுவதை ஆய்வு செய்ததாக SFA கூறியது.

சோதனை செய்த நேரத்தில் கடைக்குள் கரப்பான் பூச்சி இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று SFA கூறியுள்ளது.

இருப்பினும், கடையை சுத்தமாக வைத்திருக்க தவறிய உணவு நிறுவனத்திற்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக SFA தெரிவித்துள்ளது.

திருச்சி-சிங்கப்பூர் இருவழி செல்லும் பயணிகளுக்கு தினசரி விமானங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…