COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 626 பேர் பாதிப்பு..!

COVID-19:626 cases are work permit holders residing in dormitories
COVID-19: 626 cases are work permit holders residing in dormitories (Photo: Straits Times)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 3) நிலவரப்படி, புதிதாக 657 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 18,205ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 கிருமித்தொற்று: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 18 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் சமூக அளவில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 10 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள், மற்றும் மூன்று பேர் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள்.

புதிய குழுமங்கள்

மேலும் 6 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

  • NCS Hub (Ang Mo Kio)
  • 16 Fan Yoong Road
  • 15 Gul Way
  • 23 Sungei Kadut Street 2
  • 9A Tech Park Crescent
  • 64 Woodlands Industrial Park E9

இதையும் படிங்க : COVID -19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான உணவுகள் வழங்கப்பட்டுள்ளன..!