COVID-19; புதிய 5 நபர்களை உறுதிப்படுத்தியது சிங்கப்பூர் – மேலும் 1 குணமடைந்துள்ளார்..!

new cases of COVID-19
Singapore confirms 5 new cases of COVID-19; 1 more patient discharged

COVID-19 நோய்த்தொற்று பாதித்த புதிய ஐந்து சம்பவங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) சனிக்கிழமை (பிப்ரவரி 15) தெரிவித்துள்ளது.

இவற்றில், மூன்று பேர் ‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாலயத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்கள். ஒன்று சிலேத்தார் ஏரோஸ்பேஸ் ஹைட்ஸ் கட்டுமான தளத்துடன் தொடர்புடையவர், மற்றொன்று முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வரும் முஸ்லிம்களுக்கு ஆலோசனை..!

இந்த புதிய சம்பவங்களுடன் சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 72ஆக உள்ளது.

சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட புதிய சம்பவங்கள் அனைத்தும் சீனாவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்று MOH தெரிவித்துள்ளது.

நபர் 68

79 வயதான பெண் சிங்கப்பூரர், சம்பவம் 66ன் குடும்ப உறுப்பினர் இவர், அவருக்கு கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட் சம்பவத்துடன் தொடர்பு உள்ளது.

நபர் 69

26 வயதான பங்களாதேஷ் நாட்டவர், இவர் சிங்கப்பூர் வேலை அனுமதி பெற்றவர். இவருக்கு சிலேத்தார் ஏரோஸ்பேஸ் ஹைட்ஸ் கட்டுமான தளத்தில் தொடர்பு உள்ளது.

நபர் 70

27 வயதான பெண் சிங்கப்பூர் குடிமகன், இவரும் சம்பவம் 66 இன் குடும்ப உறுப்பினர் ஆவார்.

நபர் 71

25 வயது ஆண் சிங்கப்பூர் குடிமகன், இவருக்கும் அதே போல் சம்பவம் 66 உடன் தொடர்பு உள்ளது.

நபர் 72

40 வயதான ஆண் சீன நாட்டவர், இவர் சிங்கப்பூர் வேலை அனுமதி வைத்திருப்பவர். அவர் அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் தொற்று (COVID-19); 5 நாள் மருத்துவ விடுப்பு..!

கூடுதல் விவரம்

மேலும், சிகிச்சை பெற்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதுவரை மொத்தம் 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் 54 பேரில் பெரும்பாலானோரின் உடல் நிலை சீராக உள்ளது. ஆனால், 6 பேரின் உடல் நிலை மோசமாக இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.