COVID-19 வைரஸ் தொற்று; சிங்கப்பூரில் மேலும் நான்கு பேர் உறுதி – 5 பேர் குணமடைந்துள்ளனர்..!

ஒரு வயது குழந்தை உட்பட மேலும் ஐந்து COVID-19 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தெரிவித்துள்ளது.

அதாவது மொத்தம் 29 நபர்கள் தற்போது குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு வயது குழந்தை சிங்கப்பூரின் 76வது சம்பவமாக உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் S Pass என்னும் வேலை அனுமதி குறைக்கப்படும் – அரசு..!

இந்நிலையில், MOH செவ்வாயன்று மேலும் நான்கு புதிய சம்பவங்களை உறுதிசெய்துள்ளது. இதன் மூலம் நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 81ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மூன்று பேர், ‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள், மேலும் ஒன்று முந்தைய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் என்றும் CNA குறிப்பிட்டுள்ளது.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் நான்கு நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

குழந்தையை தவிர்த்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்ற நோயாளிகள் 5, 8, 21 மற்றும் 38 ஆகிய சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : COVID-19 கொரோனா வைரஸ் தொற்று; விமான சேவையை குறைக்க முடிவு..!

78வது நபர்

57 வயதான சிங்கப்பூரர், பிப்ரவரி 9 ஆம் தேதி அறிகுறிகள் தோன்றியதாகவும், பிப்ரவரி 10 மற்றும் பிப்ரவரி 17 ஆகிய தேதிகளில் இரண்டு ஜிபி கிளினிக்குகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை அவர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்திற்கு (NCID) அழைத்துச் செல்லப்பட்டார், அதே பிற்பகலில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

79வது நபர்

35 வயதான மலேசிய பெண், இவர் சிங்கப்பூர் வேலை அனுமதி வைத்திருப்பவர். சிங்கப்பூரின் COVID-19 வைரஸ் பாதிக்கப்பட்ட 72வது நபர் என அறிவிக்கப்பட்ட 40 வயதான சீன நாட்டவரின் குடும்ப உறுப்பினர் இவர் ஆவார்.

அவர் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு, 8A அட்மிரால்டி தெருவில் உள்ள ஃபுட் எக்ஸ்சேஞ்ச்@அட்மிரால்டிக்கு வேலைக்குச் சென்றிருந்ததாக CNA குறிப்பிட்டுள்ளது.

80வது நபர்

38 வயதான சிங்கப்பூரர், அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை (NUH) நிர்வாகத்தில் பணிபுரிகிறார். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 66வது நபரான, ‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாவலயத்தில் பணியாற்றும் நபருடன் இவருக்கு தொடர்பு உள்ளது.

தற்போது தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

81வது நபர்

50 வயதான சிங்கப்பூரர், செவ்வாய்க்கிழமை காலை COVID-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் தற்போது NCID அனுமதிக்கப்பட்டுள்ளார்.