சிங்கப்பூரில் வாட்ஸ்அப் வழியாக ஆள்மாறாட்ட மோசடி – புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!

CPIB warns of impersonators on WhatsApp
CPIB warns of impersonators on WhatsApp

சிங்கப்பூரில் வாட்ஸ்அப் வழி ஆள்மாறாட்ட மோசடி குறித்து ஊழல் புலனாய்வு பிரிவு (CPIB) எச்சரிக்கை செய்துள்ளது.

வாட்ஸ்அப் வழியாக பொதுமக்களுக்கு அனுப்பப்படும் போலி அபராதம் செலுத்தும் ஆவணங்கள் குறித்து சமீபத்தில் செய்தி வந்ததாக CPIB இன்று (நவம்பர் 18) தெரிவித்துள்ளது.

கொரோனா: சிங்கப்பூரில் தொடர்ந்து 8வது நாளாக சமூக பரவல் இல்லை

பொய்யாக ஆவணங்கள்

பணமோசடி குற்றங்கள் என சந்தேகிக்கப்படுவதால் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் சில வங்கிக் கணக்குகள் 24 மணி நேரத்திற்குள் முடக்கப்படும் என்று அந்த ஆவணங்கள் பொய்யாக சுட்டிக்காட்டியுள்ளன.

CPIB லோகோ

அந்த ஆவணங்கள் CPIB லோகோ படங்களுடன் அனுப்பப்படுகின்றன, சிலவற்றில் CPIB அதிகாரி கையொப்பமிட்டது போலவும் பொய்யாக அனுப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அவற்றை மறுஆய்வு செய்து, அவை பொய்யானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஊழல் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

உதவி எண்

இதுபோன்ற சந்தேகத்திற்குரியதாக ஆவணங்கள் அடங்கிய செய்திகளைப் பெற்ற பொதுமக்கள், ஆவணங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவிக்காக CPIBயின் ஹாட்லைன் 1800-376-0000 என்ற எண்ணை அழைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்களுக்கு அறிவுரை

அத்தகைய ஆவணங்களுக்கு, எந்தவொரு பரிவர்த்தனைக்கும் பணம் அனுப்பவோ அல்லது மாற்றவோ வேண்டாம் என்று CPIB தெரிவித்துள்ளது.

அதே போல, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி பெறுவதில் சிங்கப்பூர் பின்தங்கி இருக்காது – பிரதமர் லீ

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப திறமைகளை ஈர்க்க உதவும் புதிய வேலை அனுமதி – பிரதமர் லீ

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…