சீன புத்தாண்டு நெருங்குகிறது… இதற்காக சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கடுமை ஆகுமா?

Annie Spratt on Unsplash

வரும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தற்போது உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது, மக்கள் ஒன்றுகூடும் குழுக்களின் அளவுகளும் அதே போல இருக்கும் என்றும் இன்று (ஜனவரி 5) செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழுவின் (MTF) இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் கூறினார்.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாகூர் கந்தூரி விழா: சிங்கப்பூரில் இருந்து நாகூர் பறந்த “சிறப்புக்கொடி”

சிங்கப்பூர் தற்போது ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

“அலை எப்போது கடக்கும்? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் சீனப் புத்தாண்டுக்கு முன் அலை கடந்து செல்வதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.”

ஆகவே, மிகத் தெளிவான முறையில், இந்தக் காலகட்டத்திலும், சீனப் புத்தாண்டிலும் தற்போதைய பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படும்” என்று அவர் கூறினார்.

சமீபத்தில், கிளார்க் கீயில் நூற்றுக்கணக்கானோர் தன்னிச்சையான புத்தாண்டு கொண்டாட கூடியிருந்த நிகழ்வையும் வோங் குறிப்பிட்டார்.

பரப்பரப்பாகும் கோவை விமான நிலையம்: ஒரே நாளில் 25 விமான சேவை.. சிங்கப்பூருக்கு நேரடி விமானம்!